ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல பாலிவுட் நடிகர் இர்பான். ஹிந்தி படங்களில் ஹீரோவாகவும், குணசித்ர நடிகராகவும் நடித்து வருகிறார். லாஸ்ட் வோர்ல்ட், லைப் ஆப் பை போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார்.
இர்பான், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். தனக்கு இனம்புரியாத நோய் ஒன்று வந்திருப்பதாகவும், தான் உயிர் பிழைக்க ரசிகர்கள் பிரார்த்திக்குமாறும் அவர் வெளியிட்ட செய்தி பாலிவுட்டையே கலங்கடித்தது. அதன் பிறகு அவருக்கு மூளையை தாக்கும் விநோத, அபூர்வமான நோய் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்கான சிகிச்சை இந்தியாவில் இல்லை என்பதால் இர்பான், அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், ஆபத்தான கட்டத்தில் உயிருக்க போராடுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் பாலிவுட் சினிமாவே கலங்கி போய் உள்ளது.
ஆனால் இதை இர்பானின் மேலாளர் மறுத்துள்ளார். "இர்பான் கான் உடல்நிலை குறித்து சமூகவலைதளங்களில் பரவும் செய்தி உண்மைல்ல, அவர் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள், வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம்" என கேட்டு கொண்டுள்ளார்.