சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் | சிவராஜ்குமார் படம் மூலமாக கன்னடத்தில் நுழைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | 4 வயது குறைந்த நடிகருக்கு ஜோடியாக நடித்த கவுரி கிஷன் | பிளாஷ்பேக் : புறக்கணித்த கதையை ஹிந்தியில் ரீமேக் செய்த ஏவிஎம் | காதலியை திருமணம் செய்தார் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு 'பைசன்' படக்குழு 10 லட்சம் நிதி | மஹாகாளியாக மாறும் பூமி ஷெட்டி |

கடும் எதிர்ப்பு, சர்ச்சைகளுக்கு இடையே வெளியான பத்மாத் திரைப்படம் வெளியான 4 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்து ரூ.100 கோடி கிளப்பில் எளிதாக இடம் பெறுகிறது. 
பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, தீபிகா படுகோனா, ரன்வீர் சிங் கூட்டணியில் உருவான பத்மாவத் திரைப்படத்துக்கு படப்பிடிப்பு காலத்திலிருந்தே கடும் எதிர்ப்பு. இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியே தாக்குதலுக்கு உள்ளானார். படம் தயாரானதும், சென்சார் பிரச்னை. அது ஒரு வழியாக முடிந்தால் வழக்குகள், வன்முறை போராட்டங்கள். மாநில அரசுகளின் தடை என பல பிரச்னைகளை சந்தித்து கடந்த 26ந் தேதி வெளியானது.
ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட 4 மாநிலங்களில் படம் வெளியாகாத நிலையிலும் முதல் நாளில் 19 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இரண்டாம் நாள் வசூல் 32 கோடி, நேற்றைய நிலவரப்படி படம் 70 கோடி வசூலித்துள்ளது. இன்றைக்கு படம் பார்க்க முன்பதிவு செய்யப்பட்டுள்ளது மட்டும் 27 கோடி. எனவே இன்று மாலை பத்மாவதி 100 கோடி கிளப்பில் இணைகிறது.
படத்தில் சித்தூர் ராணி பத்மாவதியை தெய்வத்துக்கு நிகராக காட்டப்பட்டிருக்கிற செய்தி அறிந்து போராட்டங்கள் குறைந்துள்ளன. படம் வசூலை குவிப்பதால் முதலில் திரையிடத் தயங்கிய தியேட்டர்காரர்கள், இப்போது படத்தை போலீஸ் பாதுகாப்புடன் திரையிட ஆர்வம் காட்டி வருகிறார்கள். தற்போது வெளிவராத மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்கள் இந்தி பேசும் மக்களை கொண்டது. இங்கும் படம் வெளியாகி இருந்தால் படத்தின் வசூல் 200 கோடியை தொட்டு பாகுபலியின் சாதனையை முறியடித்திருக்கும் என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் பத்மாவத்துடன் வெளிவந்த தமிழ் படங்களை விட பத்மாவத் வசூல் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழியாக்கம் செய்யப்பட்ட பிரதிகளை அதிகப்படுத்தி மேலும் கூடுதலான தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது.
 
           
             
           
             
           
             
           
            