சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாகுபலி-2 படத்தை அடுத்து பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. சுஜீத் இயக்கி வரும் இந்த படத்தில் பிரபாசுடன் ஸ்ரத்தா கபூர் நாயகியாக நடித்து வருகிறார். இதுவரை ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்துள்ள அவருக்கு சாஹோ தான் முதல் தென்னிந்திய படமாகும். அதோடு இந்த படம் தமிழிலும் வெளியாகயிருப்பதால், ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் அறிமுகமாகிறார் ஸ்ரத்தா கபூர்.
இந்த படத்தை அடுத்து ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரபாஸ், அடுத்த ஆண்டு ஒரு நேரடி ஹிந்தி படத்தில் நடிக்கிறார். அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்ட நிலையில், அப்படத்தை இயக்குவது யார் என்பது பற்றிய செய்தி இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், பிரபாஸின் முதல் ஹிந்தி படத்தில் தீபிகா படுகோனே நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இன்னும் அவரை ஒப்பந்தம் செய்யவில்லை என்றபோதும், அதுகுறித்த பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.