இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் |

ஷாரூக்கான், ஹிந்தியில் தற்போது நடித்து வரும் படம் ஜீரோ. ஆனந்த் எல் ராய் இயக்கும் இப்படத்தில் ஷாரூக், குள்ள மனிதராக நடிக்கிறார். ஷாரூக்கான் உடன் கத்ரீனா மற்றும் அனுஷ்கா சர்மா முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் தலைப்பை புத்தாண்டில் வெளியிட்டார் ஆனந்த் எல்.ராய்.
படத்திற்கு ஜீரோ என தலைப்பு வைத்தது குறித்து ஆனந்த் எல் ராய் கூறுகையில், ஜீரோவில் துவங்கும் எண்கள் அதன்பின் முடிவற்று உள்ளது. அதேப்போன்று தான் ஷாரூக்கானின் கேரக்டரும். அதனால் தான் படத்திற்கு ஜீரோ என்று பெயர் வைத்துள்ளோம். இந்த கதைக்கு ஷாரூக்கான் நடித்தால் சிறப்பாக என்று எண்ணி அவரிடம் கேட்டேன். அவரும் முதன்மை ரோலில் நடித்திருக்கிறார். இந்தப்படத்தை நிச்சயம் அவர் உலகளவிற்கு கொண்டு செல்வார் என்றார்.