சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தங்கல் படத்தை அமீர்கான் ஹீரோவாக நடித்து வரும் படம் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான். தூம்-3 படத்தை இயக்கிய விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்குகிறார். முதன்முறையாக அமீர்கான், அமிதாப் பச்சன் உடன் இணைந்து நடிக்கிறார். இப்படத்தில் இவர்கள் தவிர கத்ரீனா கைப் மற்றும் பாத்திமா சனா சாகிக்கும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படம் தொடர்பாக அமீர்கான் சொன்ன விஷயம் ஒன்று, கத்ரீனாவிற்கு அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது, தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படத்தில் பாத்திமாவை, அமீர்கான் புகழ்ந்துள்ளார். மேலும் கத்ரீனாவை விட பாத்திமாவின் ரோல் அருமையானதாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
இதன்மூலம் கத்ரீனாவை விட பாத்திமாவிற்கு தான் முக்கியத்துவம் இருப்பது போன்று அமீர்கான் பேசியிருக்கிறார். இதனால் அவர் மீது அதிருப்தியில் இருக்கிறார் கத்ரீனா.