'மஞ்சும்மல் பாய்ஸ்'ல் கண்மணி அன்போடு.. 'லோகா'வில் கிளியே கிளியே..: இளையராஜா ராக்கிங் | 'பாகுபலி' தயாரிப்பாளர்களை கடுமையாகப் பேசிய போனி கபூர் | பிளாஷ்பேக்: அஜித்தின் கலையுலக மற்றும் தனி வாழ்வில் அமர்க்களப்படுத்திய “அமர்க்களம்” | நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2' | செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு | 25வது நாளைக் கடந்த 'கூலி', வசூல் 600 கோடி கடந்திருக்குமா? | ஆரம்பமானது தெலுங்கு பிக் பாஸ் சீசன் 9 | 'மதராஸி' வரவேற்பு : 'மாலதி' ருக்மிணி நன்றி | ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா |
1969-ம் ஆண்டு ராஜேஷ் கண்ணா நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற திரில்லர் படம் இத்திபா. தற்போது இந்தப்படம் ரீ-மேக்காகி உள்ளது. சித்தார்த் மல்கோத்ரா, சோனாக்ஷி சின்ஹா, அக்ஷ்ய் கண்ணா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருக்கின்றனர். அபே சோப்ரா இயக்கியுள்ளார். ரெட் சில்லிஸ் மற்றும் தர்மா புரொடக்ஷ்ன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கொலை பின்னணியை வைத்து சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகி உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் பாடல்களே இல்லையாம். வெறும் பின்னணி இசை மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாம்.
தற்போது ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் மும்முரமாய் நடந்து வருகிறது. இத்திபா படம் வருகிற நவ., 3-ம் தேதி ரிலீஸாக உள்ளது.