ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து அபிஷேக் பச்சன் வழக்கு: புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி மனு | மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே | என் அழகான ஜென்டில்மேன் நடிகரே : ரவி மோகனை வாழ்த்திய சுதா கெங்கரா! | நயன்தாரா ஆவணப்படம் வழக்கு : பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு | 2 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள மிடில் கிளாஸ் | அஜித் 64 படத்தை குறித்து புதிய தகவல் இதோ | மகுடம் பட பிரச்சனையை சுமூகமாக தீர்த்த விஷால் | சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி | மினி இட்லியாக சுவைக்கப்படணும் : பார்த்திபன் ஆசை | கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வரும் குஷி ரவி |
பத்மாவதி படக்குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன், மகாராஜா ராவல் ரத்தன் சிங் வேடத்தில் இருக்கும் ஷாகித் கபூரின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டனர். இது அவரது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சமீபத்தில் சமூக வலைதளங்களில் தனது ரசிகர்களிடம் பேசிய ஷாகித் கபூரிடம், ரசிகர் ஒருவர், மகாராஜா ராவல் ரத்தன் சிங் வேடத்தில் நடித்தது பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்கள் என கேட்டார். அதற்கு பதிலளித்த ஷாகித் கபூர், அவர் மிகவும் நேர்மையானவர், அளப்பறிய துணிச்சலானவர். பெண்களிடம் மிகுந்த மரியாதை கொண்டவர். தற்போது திருமணத்திற்கு பிறகு அதன் மதிப்பை நான் புரிந்து கொண்டுள்ளேன்.
13 ம் நூற்றாண்டைச் சேர்ந்த மன்னரான அவரது வேடத்தில் தற்போதைய காலகட்டத்தை சேர்ந்த நான் நடிப்பது மிக கஷ்டமானது. அவரது உடல் அசைவுகள், மன ஓட்டத்தை புரிந்து கொள்வதும் கஷ்டம். இருந்தும் அவரை போன்று கஷ்டப்பட்டு நடித்துள்ளேன். இது நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் என்றார். பத்மாவதி படம் வரும் டிசம்பர் முதல் தேதியன்று ரிலீசாக உள்ளது.