சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படம் ஹிந்தியிலும் ரீமேக்கானது. சூர்யா வேடத்தில் அஜய் தேவ்கன் நடிக்க, ரோகித் ஷெட்டி இயக்கினார். இங்கு சிங்கம்-2 உருவானது போன்று ஹிந்தியிலும் வேறு ஒரு கதைகளத்தில் சிங்கம்-2 உருவானது. அஜய், ரோகித்தே இரண்டாம் பாகத்தில் தொடர்ந்தனர்.
தமிழில் சிங்கம் சூர்யா என்றால் ஹிந்தியில் அஜய் தான் இதுநாள் வரை சிங்கமாக இருந்தார். ஆனால் இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழில் வெளியான சிங்கம்-3, ஹிந்தியில் அதே கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ரீ-மேக்காக உள்ளது. இம்முறை சிங்கம் வேடத்தை சன்னி தியோல் ஏற்க உள்ளார்.
பிரபல ஒளிப்பதிவாளரும், யான் படத்தின் இயக்குநருமான ரவி கே.சந்திரன் சிங்கம்-3யை ஹிந்தியில் ரீ-மேக் செய்கிறார். ரவி கே.சந்திரன், ஹிந்தியிலும் பிரபலமானவனர். ஏராளமான ஹிந்தி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்போது முதன்முறையாக பாலிவுட்டில் இயக்குநராக களம் இறங்குகிறார்.
தமிழில் இயக்குநராக வெற்றி பெற முடியாமல் போன ரவி கே.சந்திரன், ஹிந்தியிலாவது வெற்றியை பெறுவாரா...? என பொருத்திருந்து பார்ப்போம்.