சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பொக்ரானில் இந்தியா நடத்திய அணுகுண்டு சோதனையை மையமாக வைத்து இப்போது பாலிவுட்டில் ஒரு படம் தயாராகி வருகிறது. படத்திற்கு "பர்மானு - தி ஸ்டோரி ஆப் பொக்ரான்" என்று தலைப்பிட்டுள்ளார்கள். ஜான் ஆபிரஹாம், டயானா பென்டி, போமன் இரானி ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். அபிஷேக் சர்மா இயக்க, கிரிஆர்ஜ் என்டர்டெயின்ட்மென்ட் மற்றும் ஜான் ஆபிரஹாம் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்திய வரைபடத்தின் பின்னணியில் ஜான் ஆபிரஹாமின் உருவம் அதில் இருக்கிறது. அத்துடன், ஜான் ராணுவ உடையில் இருக்கும் மற்றொரு போட்டோவும் வெளியாகியுள்ளது. பொக்ரான் சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாவதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. படம் டிச., 8-ம் தேதி ரிலீஸாகிறது.