சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஹிந்தி சினிமாவில் பிரபலமான நடிகர் அனில் கபூர். தற்போது இவர், அனீஸ் பாஸ்மி இயக்கத்தில், அர்ஜூன் கபூர், இலியானா, அதியா ஷெட்டி, நேகா சர்மா ஆகியோரது நடிப்பில் முபாரக்கன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதன் டிரைலர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்னர் மும்பையில் நடந்தது. அப்போது பேசிய அனில் கபூர், ஹிந்தி சினிமாவில் நிலைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்றார்.
மேலும் அவர் கூறுகையில், நான் இந்த துறையில் சுமார் 38 ஆண்டுகளாக உள்ளேன். இத்தனை ஆண்டுகளில் நான் பல்வேறு விதமான ரோல்களில் நடித்துள்ளேன். இந்த 38 ஆண்டுகள் நான் சினிமாவில் நிலைத்து நிற்கிறேன் என்றால், ஏதோ ஒரு வகையில் நான் என் உழைப்பை கொடுத்து வருகிறேன் என்று தான் அர்த்தம். இல்லையென்றால் இந்த துறையில் நிலைக்க முடியாது என்றார்.
முபாரக்கன் படம் வருகிற ஜூலை 28-ம் தேதி ரிலீஸாக உள்ளது. சோனி பிக்சர்ஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றனர்.