சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பிரபல பாலிவுட் இயக்குநர் நிஷிகாந்த் காமத். "மும்பை மேரி ஜான், போர்ஸ், திரிஷ்யம், ராக்கி ஹேண்ட்சம்..." உள்ளிட்ட பல ஹிந்தி படங்களை இயக்கியுள்ளார். தமிழில் வெளியான எவனோ ஒருவன் படமும் இவருடையது தான். இயக்குநராக மட்டுமல்லாது ராக்கி ஹேண்ட்சம் படத்தில் வில்லனாகவும் நடித்தார். இப்போது மீண்டும் "பவேஷ் ஜோஷி" என்ற படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். மிர்ஷியா படத்தின் தோல்விக்கு பிறகு ஹர்ஷவர்தன் கபூர் நடிக்கும் படம் இது. விக்ரமாதித்யா மோத்வானி இயக்குகிறார். ராக்கி ஹேண்ட்சம் படத்தில் நிஷியின் வில்லத்தனமான நடிப்பை பார்த்து தான் தனது படத்தில் நடிக்க அவரிடம் கேட்டுள்ளார் விக்ரம். நிஷிக்கும் கதை பிடித்து போக நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார். விரைவில் நிஷி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன.