சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கடந்த மே 19ம் தேதி அர்ஜூன் கபூர் - ஸ்ரத்தா கபூர் நடிப்பில் ஹாப் கேர்ள்பிரண்ட் படமும், இர்பான் கான் - சபா ஓமர் நடிப்பில் ஹிந்தி மீடியம் படமும் ரிலீஸாகின. இதில் ஹிந்தி மீடியம் படம் விமர்சர்களால் பாராட்டை பெற்றது, ஆனால் ஹாப் கேர்ள்பிரண்ட் படத்திற்கு அந்த பாராட்டு கூட கிடைக்கவில்லை. மேலும் படத்தின் வசூலும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. படம் வெளியான ஒருவார காலத்தில் ஹாப் கேர்ள்பிரண்ட் படம் ரூ.49.19 கோடியும், ஹிந்தி மீடியம் படம் ரூ.25.21 கோடியும் வசூலித்திருக்கிறது. இரண்டு படமும் மேற்கொண்டு தலா ரூ.10 கோடியாவது வசூலித்தால் தான் படம் பாக்ஸ் ஆபிஸில் இணையும், இல்லாவிட்டால் அனைவரும் நஷ்டமின்றி மட்டுமே தப்பித்து கொள்வார்கள் என விநியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.