அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் |
பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகியோரை தொடர்ந்து மற்றுமொரு பாலிவுட் நடிகையான ஷேனாஷ் டிரசரிவாலாவும் ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார். தி பிக் சிக் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஷேனாஷ், பாகிஸ்தான் பெண்ணாக நடிக்க இருக்கிறார்.
இதுப்பற்றி ஷேனாஷ் டிரசரிவாலா கூறியிருப்பதாவது... "அமெரிக்காவில் வசிக்கும் ஒரு பாகிஸ்தான் குடும்பத்திற்கும், அங்கு வசிக்கும் அமெரிக்க குடும்பத்தினருக்கும் இடையே நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு தி பிக் சிக் படம் உருவாக உள்ளது. அமெரிக்காவில் இனவெறி சம்பவங்கள் இப்போதும் நடக்கின்றன, அப்படிப்பட்ட சூழலில் பாகிஸ்தான் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களது மதம், கலாச்சாரத்தை எப்படி பின்பற்றி வாழ்கிறார்கள், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன... உள்ளிட்டவைகள் இப்படத்தில் பேசப்பட இருக்கிறது. இதில் பாகிஸ்தானை சேர்ந்த இளம் பெண்ணாக நான் நடிக்கிறேன். அனுபம் கேரும் முக்கிய ரோலில் நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது" என்றார்.