சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் வெவ்வேறு விதமான கேரக்டரில் நடிப்பது சிரமமான ஒன்று என்று நடிகை ஸ்ரத்தா கபூர் கூறியுள்ளார். ஸ்ரத்தா, தற்போது ‛ஹசீனா', ‛ஹாப்கேர்ள்பிரண்ட்' என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் ஹசீனா படம், நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனாவை பற்றியது. இதற்காக தனது தோற்றத்தை வேறுவிதமாக மாற்றி நடித்து வருகிறார். இதேப்போன்று ஹாப்கேர்ள்பிரண்ட் படத்தில் டில்லி பெண்ணாக ரியா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.
ஒரேநேரத்தில் இரண்டு படங்களில் நடிப்பது பற்றி ஸ்ரத்தா கூறியதாவது... ‛‛ஹசீனா படத்தில் ஹசீனா வேடத்திலும், ஹாப்கேர்ள்பிரண்ட் படத்தில் ரியா சோமனி என்ற ரோலிலும் நடிக்கிறேன். இரண்டு படங்களும் ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமானவை. முற்றிலும் மாறுப்பட்ட கேரக்டர்கள். இரண்டு படத்திற்கும் ஒரேநேரத்தில் ஷூட்டிங் நடப்பதால் மாறி மாறி நடிப்பது கேரக்டர் மாற்றுவது உள்ளிட்ட பல விஷயங்கள் சிரமமாகவும், சவாலாகவும் உள்ளது'' என்று கூறியுள்ளார்.