சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் சல்மான்கான் மற்றும் ஷாரூக்கான். சமகாலத்தில் சினிமாவில் அறிமுகமான இவர்கள் ஆரம்பத்தில் சில படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். தொழில்முறை போட்டியால் இருவருக்குள்ளும் போட்டிகள் வரும், சில சமயம் அதுவே பிரச்னையாக கூட வெடித்திருக்கிறது. ஆனால் சில ஆண்டுகளாகவே ஷாரூக்கான் - சல்மான்கான் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது. தற்போது இருவரும் இணைந்து ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்கள்.
இந்நிலையில் சல்மான் கான் நடித்து வரும் டியூப்லைட் படத்தில் ஷாரூக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த ரோலில் நடிகர் சத்ருகன் சின்ஹாவை நடிக்க வைக்க எண்ணினார் சல்மான், ஆனால் அது சரிவராமல் போகவே இப்போது ஷாரூக்கானை நடிக்க வைக்க பேசி வருகின்றனர். ஒருவேளை ஷாரூக்கான் நடிக்க ஒப்புக்கொண்டால் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு சல்மானும், ஷாரூக்கானும் இணைந்த நடித்த படமாக டியூப்லைட் இருக்கும். முன்னதாக இருவரும் ‛ஓம் சாந்தி ஓம்' என்ற படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடதக்கது.
‛டியூப் லைட்' படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு தொரிவித்துள்ளது.