சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமில்லாமல் தேசிய விருதும் பெற்றவர் நடிகை வித்யாபாலன். தற்போது ‛பேகம் ஜான்' என்ற படத்தில் நடிக்கிறார். இது பெங்காலியில் வெளிவந்த ‛ராஜ்காஹினி' படத்தின் ரீ-மேக் ஆகும். பெண் இயக்குநர் ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கும் இப்படத்தில் வித்யாபாலன், விலை மாதுவாக நடிக்கிறார். இவருடன் கவுகார் கான், ரித்திமா திவாரி, பல்லவி ஸ்ரத்தா, இலா அர்ஜூன், மிஸ்தி, பிளோரா சைனி, நஸ்ரூதின் ஷா, விவேக், ராஜேஷ் சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சுதந்திர இந்தியாவிற்கு முந்தைய காலக்கட்டத்தில் படத்தின் கதை நகருகிறது. இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் வித்யாபாலன் மற்றும் அவருடன் இணைந்த பெண்கள் பாலியல் தொழில் செய்வது போன்று கதை உருவாக இருக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். அதில் வித்யாபாலன் ஒரு கயிற்று கட்டிலில் படுத்தபடி ஹூக்காவை புகைத்து கொண்டிருக்கிறார். உடன் இரண்டு பெண்கள் அவருக்கு பணி செய்வது போன்று அந்த போஸ்டர் உள்ளது. பேகம் ஜான் படம் இந்தாண்டு ஜனவரியில் ரிலீஸாக இருந்தது, ஆனால் படப்பிடிப்பு முடியாத காரணத்தால் ரிலீஸ் தேதி மார்ச் 17-ம் தேதிக்கு தள்ளிபோய் உள்ளது.