சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான தங்கல் திரைப்படம் மூன்றே நாட்களில் 100 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. முதல் நாளிலேயே சுமார் 29 கோடி ரூபாய் அளவிற்கு வசூலித்து, இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த இரண்டாவது படம் என்ற பெயரை பெற்றது தங்கல். தற்போது பாக்ஸ் ஆபிஸில் மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது தங்கல்.
அதாவது, "கிங் ஆப் பாக்ஸ் ஆபீஸ்" என்று அழைக்கப்படும் சல்மான்கானின் சுல்தான் படம் முதல்நாளில் ரூ.36 கோடியும், ஒரேவாரத்தில் ரூ.180 கோடியும் வசூலித்து முதலிடத்தில் இருந்தது. இப்போது அந்த சாதனையை தங்கல் முறியடித்திருக்கிறது. தங்கல் படம் வெளியான ஒரு வாரத்தில் தங்கல் சுமார் ரூ. 197 கோடிகளை குவித்திருக்கிறது. இதன்மூலம் ஒருவார வசூலில் சல்மானின் சுல்தானை முந்தியிருக்கிறது அமீர்கானின் தங்கல்.தொடர்ந்து ‛தங்கல்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சுல்தான் படத்தின் வாழ்நாள் சாதனையை தங்கல் முறியடிக்குமா...? என்பதை பொருத்திருந்து பார்கலாம்....!