'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் | பிளாஷ்பேக்: டைட்டிலில் பெயர் போட்டுக்கொள்ளாத தயாரிப்பாளர் | எம்ஜிஆர் - கருணாநிதி, நட்பு, மோதல் தழுவலில் 'காந்தா'? | கோவாவில் கூடிய 90 ஸ்டார்ஸ் : ஆட்டம், பாட்டம்,பார்ட்டி என கொண்டாட்டம் | 25 நாட்களைக் கடந்த '3 பிஹெச்கே, பறந்து போ' |
பிரபுதேவா இயக்கும் அடுத்த படத்தில் அபிஷேக் பச்சன் நடிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் பாலிவுட்டில் தகவல் கசிந்தது. தற்போது அந்த தகவல் உண்மை தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் ஒரு மாறுபட்ட, மிக முக்கியமாக ரோலில் அபிஷேக் நடிக்க உள்ளாராம். சூழ்நிலை நிர்பந்தத்தின் காரணமாக ஒரு நகரை காக்கும் பொறுப்பை கையில் எடுக்கும் எளிமையான மனிதர் வேடத்தில் அபிஷேக் நடிக்கிறாராம். கோனா வெங்கட் இப்படத்திற்கான கதையை தயார் செய்து விட்டாராம். தற்போது இப்படத்திற்கான திரைக்கதையை தயார் செய்து கொண்டிருக்கிறாராம். இப்படத்தில் நடிப்பதற்காக அபிஷேக் தனது உடலை பில்டப் செய்ய உள்ளாராம். அடுத்த ஆண்டு சூட்டிங் வேலைகள் துவங்கப்பட உள்ள இப்படத்தை ஏபிசிஎல் புரோடெக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளது.