சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாலிவுட் நட்சத்திர தம்பதியான, மலைக்கா அரோரா, 43 - அர்பாஸ் கான், 49, விவாகரத்து கோரி, குடும்ப நல கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். பாலிவுட், கோலிவுட் திரை நட்சத்திரங்கள் பலரும் விவாகரத்து பெறுவது அதிகரித்துஉள்ளது. திருமணமாகி பல ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தம்பதியர் கூட, விவாகரத்து பெற்று, இரண்டாம் திருமணமும் செய்கின்றனர். இந்நிலையில், பாலிவுட் நட்சத்திரங்களான, மலைக்கா அரோராவும், அர்பாஸ் கானும், 1997ல் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு, 14 வயது மகன் உள்ளான். இவர்கள் இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, மும்பை குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர். உயிரே திரைப்படத்தில், தைய தையா பாடலில், ஓடும் ரயிலில் நடனமாடிய மலைக்கா, பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தம்பியான, அர்பாஸ் கான், நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றிஉள்ளார்.