சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இந்தி படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடிக் கொண்டிருந்தவர் சனா கான். தமிழ் படமான ஈ படத்திலும் ஆடினார். அதைத் தொடர்ந்து சிம்பு நடித்த சிலம்பாட்டம் படத்தில் ஹீரோயின் ஆனார். தொடர்ந்து பரத் நடித்த தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, ஒரு நடிகையின் டைரி, தலைவன் படங்களில் நடித்தார். இடையில் தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்தார். இங்கு வாய்ப்புகள் குறையவே மீண்டும் இந்திக்கே திரும்பினார்.
தற்போது வஜா தும் ஹோ என்ற படத்தில் படுகவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வல்லவன் படத்தில் நயன்தாரா உதட்டை சிம்பு கடித்து இழுத்தது போன்று சனா கான் உதட்டை சர்மன் ஜோஷி கடித்து இழுத்திருக்கிறார். இதுதவிர படம் முழுக்க படுக்கை அறை காட்சிகள் நிறைந்திருக்கிறதாம். அதில் துணிச்சலுடன் நடித்திருக்கிறார் சனா கான். விஷால் பண்டியா இயக்கி உள்ள இந்தப் படத்தை பூஷன் குமார் தயாரித்துள்ளார். படம் டிசம்பர் 2ந் தேதி வெளிவருகிறது. தற்போது படத்தின் டீசர் பரபரப்பை கிளப்பி வருகிறது.