சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
அஜய்தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள ‛சிவாய்' படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்துள்ளது. அஜய்தேவ்கன், எரிக்கா கவுர், சாயிஷா ஷெகல் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛சிவாய். அவரே இயக்கி, தயாரித்துள்ள இப்படம் அஜய்யின் கனவுப்படம் என்று கூறப்படுகிறது. சிவாய் ஒரு ஆக்ஷ்ன் படமாக உருவாகியுள்ளது. சிவாய் படத்தின் போஸ்ட் பணிகள் எல்லாம் முடிந்து சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் சிவாய்-க்கு யு சான்று கொடுத்ததாக நேற்று செய்தி வெளியானது. ஆனால் சற்றுநேரத்திலேயே நடிகர் அஜய், அந்த செய்தி உண்மையில்லை, சென்சார் போய் கொண்டு இருக்கிறது, நானே முறையாக அறிவிக்கிறேன் என்றார்.
இந்நிலையில் சிவாய் படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்துள்ளது. இதை அஜய் தேவ்கனும் உறுதி செய்து தன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளதோடு, சென்சார் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து இருக்கிறார். அஜய்-எரிக்கா இடையே சில நெருக்கமான முத்தக்காட்சிகள் இருந்ததால் அதை நீக்க படக்குழு மறுத்ததால் யு/ஏ சான்று அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படத்தின் நீளமும் 175 நிமிடங்களிலிருந்து 158 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிவாய் படம் வருகிற 28-ம் தேதி, தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.