சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தென்னகத்தை சேர்ந்த ஏஆர் முருகதாஸ் பாலிவுட்டிலும் பிரபல இயக்குநராக உள்ளார். தற்போது நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் வெளிவரவிருக்கும் அகிரா படத்தை இயக்கியுள்ளார் முருகதாஸ். நாளை வெளியாக உள்ள அகிரா படத்தின் இறுதிக்கட்ட புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார் முருகதாஸ். இதனிடையே முருகதாஸிடம், சல்மானை வைத்து எப்போது படம் பண்ண போகிறீர்கள் என்று கேட்டபோது அவர் பதிலளித்தாவது...
"சல்மான் கானை வைத்து கண்டிப்பாக நான் ஒரு படம் இயக்கவிருக்கிறேன். சல்மான் நடிக்க இருக்கும் இப்படத்தை அதுல் அக்னிஹோத்ரி தயாரிக்கிறார். அவரிடத்தில் இரண்டு , மூன்று கதைகள் கூறினேன், ஆனால் அது எதுவும் அவருக்கு பிடிக்கவில்லை . தற்போது சல்மான் நிறைய படத்தில் நடித்து வருவதால் நான் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து என் அடுத்த படத்தை இயக்க ஆரம்பித்துவிட்டேன். சல்மானை வைத்து படம் இயக்குவது என்பது என் கனவு, கண்டிப்பாக இயக்குவேன். நல்ல கதைக்காக காத்து கொண்டுயிருக்கிறேன் " என்று கூறினார்.
அகிரா படம் 2016, செப்டம்பர் 2ஆம் தேதியான நாளை வெளியாக இருக்கிறது.