சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சர்ச்சைக்குரிய உட்தா பஞ்சாப் திரைப்படத்தை வெளியிட சினிமா தணிக்கை குழு அனுமதி அளித்துள்ளது. இயக்குனர் அபிஷேக் சவுபே இயக்கத்தில், நடிகர் ஷாகித் கபூர் ஹீரோவாக நடிக்கும் படம் உட்தா பஞ்சாப். இந்த படத்தை தணிக்கை செய்த சினிமா தணிக்கைக் குழு, அதில் சில காட்சிகள் ஆட்சேபனைக்கு உரியதாக இருப்பதாக கூறி நீக்கியது. மேலும், 13 இடங்களில் மாற்றம் செய்யுமாறு பரிந்துரை அளித்தது. இதற்கு படக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து கோர்டுக்கு சென்றனர்.
அப்போது, தணிக்கை குழுவுக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை கோர்ட்டில் முன் வைத்தது உட்தா பஞ்சாப் படக் குழு. இதனிடையே சர்ச்சைக்குரிய உட்தா பஞ்சாப் திரைப்படத்தை வெளியிட சினிமா தணிக்கை குழு அனுமதி அளித்துள்ளது. படத்திற்கு சினிமா தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. சர்ச்கைகுரிய 13 காட்சிகளை நீக்கியதால் அனுமதி அளித்துள்ளதாக சினிமா தணிக்கை குழு தெரிவித்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்ட உட்தா பஞ்சாப் பட விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.