சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஷாரூக்கானும் ஒருவர். தற்போது அவர் ரயீஸ் படத்தில் நடித்து வருகிறார். ஷாரூக்கானுக்கு ஆர்யன், சுஹானா, ஆப்ராம்கான் என்ற மூன்று குழந்தைகள் உள்ளன. சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் தன் குழந்தைகளின் எதிர்காலம் என்ன, அவர்கள் எதில் விருப்பமாக உள்ளார்கள் என்பது பற்றி பேசியிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது... என் மகள் சுஹானாவிற்கு நடிப்பில் தான் ஆர்வம் அதிகம். எப்போதும் அவர் சினிமா தொடர்பான விஷயங்களில் தான் கவனம் செலுத்துகிறார், தியேட்டர், நடிப்பு உள்ளிட்ட விஷயங்களை ரசிக்கிறார். மகன் ஆர்யன் இப்போது தான் பள்ளியில் உயர்கல்வியை முடித்திருக்கிறார், அடுத்தப்படியாக அவர் கல்லூரிக்கு செல்கிறார், தற்போதைய சூழலில் அவருக்கு படிப்பில் தான் ஆர்வம் அதிகம். அவருடைய எதிர்காலத்தை அவர் தான் தீர்மானிப்பார் என்று ஷாரூக் கூறியுள்ளார்.