சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மத்திய அரசு ஆட்சி பொறுப்பேற்றதன் இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பெண் குழந்தை பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு சமஉரிமை வழங்குதல் என்ற நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், பள்ளி மாணவிகள் பலர் கேட்ட கேட்விகளுக்கு பதிலளித்த அமிதாப், பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் பற்றி பேசினார். அப்போது ஒரு மாணவி, உங்களின் குழந்தை பருவத்தை பற்றி நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் எப்படி பிக் பாஸ் ஆனீர்கள் என கேட்டார்.
அதற்கு பதிலளித்த அமிதாப் பச்சன், யார் சொன்னது நான் பிக் பாஸ் என்று? பாருங்கள், நான் உங்களை விட மிகச் சிறியவன் என கூறி தரையில் அமர்ந்து மாணவிகளுடன் பேசினார். பிறகு அதற்கு அவரே விளக்கமும் அளித்தார். பிக் பாஸ் என்பது மீடியாக்கள் எனக்கு வைத்த பெயர். உண்மையில் யாரும் பெரியவர் அல்ல. ஒருவர் தனது வேலையை பார்த்து, கடுமையாக உழைத்தால் கண்டிப்பாக லட்சியத்தை அடையலாம் என கூறிய அவர், தனது தந்தை எழுதிய புகழ்பெற்ற வரிகள் சிலவற்றையும் மேற்கோள் காட்டினார்.