சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஷிவ்வாய் படத்தை தொடர்ந்து அஜய் தேவ்கன் நடிக்கும் படம் பாத்சாகோ. இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 26ம் தேதி ரிலீஸாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அன்றைய தினம் தான் ஹிருத்திக் ரோஷனின் காபில் படமும் ரிலீஸாகிறது. சிலதினங்களுக்கு முன்னர் இந்த ரேஸில் ஷாரூக்கானின் ரேயீஸ் படமும் இணைந்தது.
இந்நிலையில் இந்தநாளில் ஷாரூக்கான் படம் ரிலீஸாவது காபில் படத்தின் தயாரிப்பாளரும், ஹிருத்திக்கின் அப்பாவுமான ராகேஷ் ரோஷனுக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது. ஒரேநாளில் மூன்று பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸானால் படங்களின் வசூல் பாதிக்கப்படும் என்று அவர் கருதுகிறார். இந்தச்சூழலில் ஜன.,26 ரேஸிலிருந்து அஜய்யின் 'பாத்சாகோ' படம் விலகியுள்ளதாம். இதுப்பற்றி விசாரித்த போது கிடைத்த தகவல் இது...
அஜய், தற்போது 'ஷிவ்வாய்' படத்தின் இறுதிக்கப்பட்ட படப்பிடிப்பில் இருக்கிறார். இதனைத்தொடர்ந்து ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் 'பாத்சாகோ' படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளார். எப்படியும் ஷூட்டிங் முடிய இரண்டு-மூன்று மாதங்கள் ஆகுமாம். அதன்பின்னர் போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் எல்லாம் முடிக்க நாளாகும் என்பதால் ஜனவரி 26ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என்று படக்குழு கருதுகிறதாம். எனவே படத்தை மார்ச் 10ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.