சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர். தற்போது பாலிவுட்டின் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த நீர்ஜா படம், இவருக்கு நல்லதொரு அடையாளத்தை கொடுத்துள்ளது. பலரும் சோனமின் நடிப்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இன்னும் சிலரோ சோனத்திற்கு இந்தாண்டு தேசிய விருது கிடைக்கும் என்று கூறி வருகின்றனர். அந்தளவுக்கு நடிப்பில் முன்னேறி இருக்கிறார் சோனம். ஆனால் சோனம் கபூரின் தந்தையும், நடிகருமான அனில் கபூரோ, சோனம், இன்னும் நடிப்பில் முன்னேற வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது... ''இந்த உலகத்தில் நடிகராகிய ஒவ்வொரு வரும் தொடர்ந்து கற்று கொண்டே இருக்க வேண்டும். சிறந்த நடிகர்கள் என்று ஒரு நடிகரோ அல்லது நடிகையோ பெயர் எடுத்தாலும் கூட அவர்கள் தொடர்ந்து சினிமாவில் கற்று கொண்டே இருக்க வேண்டும். சோனம் கபூருக்கும் அது பொருந்தும். தன்னுடைய நடிப்பிற்கு பாராட்டு கிடைத்தாலும், அதை கருத்தில் கொள்ளாது தொடர்ந்து அவர் தன்னை வளர்த்து கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் நடிகர் என்பவர் ஒரு மாணவர் போன்றவர். சினிமா பெரிய கடல் போன்றது, அதை யாரும் முழுமையாக கற்கவில்லை என்று கூறியுள்ளார்.