சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஹிந்தி படமான ஜுபான் திரைப்படம் தனது ஸ்கிரீனிங்கை ஜனவரி 3ம் தேதி பாம் ஸ்பிரிங்ஸ் இண்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவலில் வெற்றிகரமாக திரையிட்டது. இசை சம்பந்தப்பட்ட படமான இத்திரைப்படம் விழாவில் பலரால் பாராட்டப்பட்டது.
பிரபல ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் நடிகரான வில்ஸ்மித்தையும் இந்த திரைப்படம் வெகுவாக கவர்ந்தது. இத்திரைப்படத்தை மிகவும் புகழ்ந்து பாராட்டியுள்ளார் வில்ஸ்மித்.
மோசஸ் சிங்கி இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படம் மார்ச் 4ம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.
வேவ் சினிமா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் மாசான் படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் விக்கி குஷால் நடித்துள்ளார். ஹிரோயினாக முன்னாள் பெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற சாரா ஜேன் தயாஸ் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற பூசன் இண்டர்நேஷனல் திரைப்பட விழாவிலும் இத்திரைப்படம் கலந்து கொண்டு ரைஸிங் டைரக்டர் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.