ரஜினி 173வது படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட பிரபலம்! | தனுஷ் 55வது படத்தில் தெலுங்கு நடிகர்! | கர்நாடக பாடகி எஸ்.ஜே. ஜனனிக்கு 'எம்போஹெர்' விருது | கவுண்டமணி கதாபாத்திர பெயரை டைட்டிலாக வைத்து நடிக்கும் யோகிபாபு | மம்முட்டி சுரேஷ்கோபி பட தயாரிப்பாளருக்கு நான்கு வருட சிறை ; 67 லட்சம் அபராதம் | 'பிரம்மயுகம்' டைரக்டரின் புதிய ஹாரர் படத்தில் நடிக்கும் பிரித்விராஜ்-மஞ்சு வாரியர் | என்னிடம் கேட்காமலேயே கதையை மாற்றி விட்டார் ; வரலட்சுமி மீது 'சரஸ்வதி' பட கதாசிரியர் குற்றச்சாட்டு | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனருக்கு முன் ஜாமின் வழங்கிய நீதிமன்றம் | 3ம் மனுஷியின் 3ம் தர டுவீட்.. வருத்தம் தெரிவித்திருக்க மாட்டேன்: திரிஷா விவகாரத்தில் பார்த்திபன் கருத்து | கொரிய நடிகர்கள் ரசித்த 'தளபதி' பாடல் |

பாலிவுட்டின் வெற்றி ஹீரோயின் தீபிகா படுகோனே நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் பிக்கு. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தீபிகாவுக்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சுத்தி படத்தை நிரகாரித்த தீபிகா அடுத்தப்படியாக யாஸ்ராஜ் படத்தையும் நிரகாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாஸ் ராஜ் பிலிம்ஸ் சார்பில், விஜய் கிருஷ்ண இயக்கத்தில், ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் ஒரு படம் தயாராக இருக்கிறது. இப்படத்தில் தீபிகா தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அவர் அந்த படத்தை நிராகரித்துவிட்டாராம். இயக்குநர் சொன்ன கதையில் அவருக்கு திருப்தி இல்லையாம், அதனால் அவர் நிராகரித்தாக கூறப்படுகிறது. அதேசமயம் அவர் ஹிருத்திக் படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளார், நவம்பரில் படப்பிடிப்பு துவங்குகிறது என்கிறார்கள்.
இதனிடையே ஐ படத்திற்கு பிறகு ஷங்கர், ரஜினியை வைத்து இயக்க இருக்கும் எந்திரன்-2 படத்தில் தீபிகாவை நடிக்க வைக்க பேசி வருகிறாராம். ஆனால் இன்னும் உறுதியாகவில்லை என்கிறார்கள்.




