சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சல்மான் நடிப்பில் பாலிவுட்டில் வௌியாகி பட்டைய கிளப்பி கொண்டிருக்கும் படம் ''பஜ்ரங்கி பைஜான்''. கபீர்கான் இப்படத்தை இயக்கி இருந்தார். பாக்ஸ் ஆபிஸ் வசூலை பஜ்ரங்கி பைஜான் படம் குவித்து கொண்டிருக்கிறது. இந்தப்படத்திற்கு பிறகு பாலிவுட்டில் அதிக தேடப்படும், விரும்பப்படும் இயக்குநராக மாறியிருக்கிறார் கபீர்கான். இந்நிலையில், சல்மான்கான் படத்திற்கு பிறகு அடுத்தப்படியாக, ஹிருத்திக் ரோஷனை, கபீர்கான் இயக்க இருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது.
இதுகுறித்து கபீர்கான் கூறியுள்ளதாவது... ஆமாம், நாங்கள் பேசி வருகிறோம், ஆனால் இன்னும் எதுவும் உறுதியாகவில்லை என்று கூறியுள்ளார்.
தற்போது ஹிருத்திக் ரோஷன். மொகஞ்சதரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்து யாஸ்ராஜ் பிலிம்ஸ் ஒரு படத்தில் நடிக்கும் ஹிருத்திக், அதற்கு அடுத்தப்படியாக கபீர்கான் இயக்கத்தில் நடிக்கிறார். அரசியல் மற்றும் சரித்திர பின்னணி கொண்ட கதையாக இப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஒருவேளை இப்படம் உறுதியாகும் பட்சத்தில் ஹிருத்திக் ஜோடியாக ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிப்பார் என தெரிகிறது.