Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சல்மான் படத்தின் வசூலை சயீப் படம் மிஞ்சும் : கரீனா

26 ஜூலை, 2015 - 12:51 IST
எழுத்தின் அளவு:
Kareena-wants-Saifs-film-Phantom-do-well-at-Box-office-as-campare-to-Salmans-Bajrangi-Bhaijaan

சல்மான் கான் நடிப்பி்ல் உருவாகியுள்ள "பஜ்ரங்கி பைஜான்" படம் சி்றப்பாக வந்துள்ளதில் மகிழ்ச்சி தான் என்றாலும், தனது கணவர் சயீப் அலி கான் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் "பான்டோம்" படம் அதைவிட சிறப்பாக உள்ளது என்றும், வசூலில் சல்மான் படத்தை, சயீப் படம் மிஞ்சும் என்று கரீனா கபூர் கூறியுள்ளார். பான்டோம் படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. டிரைலரை பார்த்தபின் கரீனா கபூர் கூறியதாவது, பான்டோம் படத்தின் டிரைலர், அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. படம் பார்க்கும் ஆவலை ,டிரைலர் அதிகரி்க்க செய்கிறது. பஜ்ரங்கி பைஜான் படத்தின் வசூலை, பான்டோம் படம் முறியடிக்கும் என்று கரீனா கபூர் கூறியுள்ளார். பஜ்ரங்கி பைஜான் படத்தை இயக்கிய கபீர் கானே, பான்டோம் படத்தையும் இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)