சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இயக்குநர் சூரஜ் பர்ஜாத்யா, சல்மான் கான் கூட்டணியில், ''மைன் பியார் கியா'', ''ஹம் ஆப்கே கெயின்கோன்'' போன்ற சூப்பர் ஹிட் படங்கள் வெளிவந்தன. கடைசியாக இருவரும் ''ஹம் சாத் சாத் ஹே'' என்ற படத்தில் இணைந்தனர். அதன்பின் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் தற்போது இணைந்துள்ளனர். இவர்களது கூட்டணியில், ''பிரேம் ரத்தன் தன் பயோ'' என்ற படம் உருவாகி வருகிறது. இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அதில் ஒரு சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீபாவளிக்கு ஒருநாள் தள்ளி அதாவது நவம்பர் 12ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பண்டிகை தினங்களில் ஷாரூக்கான், சல்மான்கான், அமீர்கான் ஆகியோரது படங்கள் அதிக வசூலை குவிக்கும். கடந்த ஆண்டு ஷாரூக்கான் நடிப்பில் வெளிவந்த ஹேப்பி நியூ இயர் படம் ஒரேநாளில் ரூ.43 கோடி வசூலித்து சாதனை படைத்தது. அதேப்போல் இந்தாண்டு சல்மான் படம் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்ததால் ஷாரூக்கானின் வசூல் சாதனையை முறியடிக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தற்போது ஒருநாள் தள்ளி ரிலீஸாவது விநியோகஸ்தர்கள் மத்தியில் சிறு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனிடையே இந்த ரம்ஜான் பண்டிகையில் சல்மானின், பஜ்ரங்கி பகிஜான் படம் ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது.