சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பிரபல டான்ஸ் மாஸ்டர் ரெமோ டிசோசா இயக்கிய படம் ஏபிசிடி (Any body can dance). இதில் பிரபுதேவா, கணேஷ் ஆச்சார்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக ஏபிசிடி-2 உருவாகியுள்ளது. வருண் தவான் மற்றும் ஸ்ரத்தா கபூர் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இந்தப்படமும் நடனத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இப்படம் ஜூனில் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் டிரைலரை இம்மாதம் ரிலீஸ் செய்ய உள்ளனர்.
இதுகுறித்து ரெமோ டிசோசா கூறியுள்ளதாவது, ஏப்ரல் 24ம் தேதி ஏபிசிடி-2 டிரைலர் வௌியாக இருக்கிறது, இதை நான் மிகவும் ஆவலாய் எதிர்பார்த்து காத்திருக்கிறேன், டிரைலர் ரிலீஸ் விழா பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை, ஆனால் டிஸ்னி சில திட்டங்களை வைத்துள்ளது என்று கூறியுள்ளார்.