சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மர்தானி படத்தில், ராணி முகர்ஜியின் நடிப்பை பார்த்த, போலந்து மக்களி்ல் பெரும்பாலானோர், ராணி முகர்ஜியின் தீவிர ரசிகர்களாகி விட்டனர். பிரதீப் சர்க்கார் இயக்கத்தில், ராணி முகர்ஜி நடிப்பில் உருவாகியுள்ள மர்தானி படத்தின் பிரீமியர் ஷோ, போலந்து நாட்டின் வர்சா நகரில் உள்ள கிவோ முரனோவ் தியேட்டரில் திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், போலந்து நாட்டின் முனனணி ஒளிப்பதிவாளரான அர்டுர் ஜூராவ்ஸ்கி, தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். பின் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு, அர்டூர், ஜூராவ்ஸ்கியும், ராணி முகர்ஜியும் பதிலளித்தனர். ராணி முகர்ஜியின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. போலந்து நாட்டில், பிரீமியர் ஷோ திரையிடப்பட்ட முதல் பாலிவுட் படம் என்ற பெருமையை மர்தானி படமும், இதில் கலந்துகொண்ட முதல் நடிகை என்ற பெருமையை, ராணி முகர்ஜியும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.