சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாலிவுட்டின் முன்னணி நடிகை வித்யாபாலன். தி டர்ட்டி பிக்சர்ஸ், கஹானி படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த வித்யாபாலன், தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்திற்காக தேசிய விருதும் பெற்றார். இப்போது ஹமாரி அதுரி கஹானி என்ற படத்தில் முற்றிலும் வித்தியாசமாக நடித்து வருகிறார் வித்யாபாலன். தற்போது இப்படத்தின் ஷூட்டிங்கில் கிடைத்த ஓய்வு நாட்களை லாஸ் ஏஞ்சல்ஸில் கழித்து வருகிறார். இந்நிலையில் சமீபகாலமாக பிரபலங்களின் வாழ்க்கையை யைமாக வைத்து பாலிவுட்டில் அதிக படங்கள் வௌிவர தொடங்கியுள்ளன.
மேலும் அப்படி வெளியாகும் படங்கள் ஹிட் படங்களாகவும் அமைகின்றன. அந்த வகையில் ஏற்கனவே நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றில் நடித்த வித்யாபாலனுக்கு இப்போது, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ மற்றும் நடிகை சுஜித்ரா சென்னின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இதுதொடர்பாக வித்யாபாலனிடம் இயக்குநர் ஒருவர் பேசியுள்ளாராம். ஆனால் வித்யா இன்னும் எந்த முடிவும் சொல்லவில்லையாம்.