Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

புத்தகம் எழுதப்போகிறார் ஹிருத்திக் ரோஷன்!

18 செப், 2014 - 09:15 IST
எழுத்தின் அளவு:

பாலிவுட்டின் ஹேண்ட்சம் ஹீரோவான ஹிருத்திக் ரோஷன், உடம்பை பிட்டாக வைத்துக் கொள்வது பற்றி புத்தகம் எழுத எண்ணியுள்ளார். பாலிவுட் ஹீரோக்களில், உடலை பிட்டாகவும், சிக்ஸ் பேக் போன்றவற்றுடன் உடம்பை பராமரித்து வருபவர்களில் ஹிருத்திக் ரோஷன் முதன்மையானவர். எப்போதும் தனது உடலை அழகாகவும், பிட்டாகவும் வைத்துக்கொள்வார். இந்நிலையில் தன்னை சுற்றி இருப்பவர்களும் உடம்பை பிட்டாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள அவ்வப்போது ஆலோசனை வழங்குவார், இதை ஏன் எல்லோரும் செய்ய கூடாது என்று எண்ணியவர் இப்போது உடம்பை பிட்டாக வைத்து கொள்வது எப்படி என்று புத்தகம் எழுத உள்ளார். அந்தபுத்தகத்தில் உடம்பை பிட்டக்க எந்த மாதிரியாக உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும், எந்த மாதிரியான உணவுவகைகளை எடுத்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை சொல்ல போகிறாராம். தற்போது பேங் பேங் படத்தின் புரொமோஷன் மற்றும் தனது அடுத்தபடமான மொகஞ்சதரோ பட ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பவர், இந்தபடங்களை எல்லாம் முடித்து அடுத்தாண்டு புத்தகம் எழுத எண்ணியிருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)