சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பொதுவாக, சினிமாக்களில், நடிகர்கள் தான், ‘சிக்ஸ் பேக், எய்ட் பேக்’ எல்லாம் வைத்து நடிப்பார்கள். இதற்காக, கடுமையான உடற்பயிற்சி செய்து, சாப்பிடாமல் இருந்து, விரதம் இருப்பது போல், உடலை வருத்தி, மெனக்கெடுவர். இப்போது, நடிகைகளுக்கும், ‘சிக்ஸ் பேக்’ வைத்து நடிக்கும் கலாசாரம் துவங்கியுள்ளது.பாலிவுட் நடிகை கரீனா கபூர், ஹிருத்திக் ரோஷன் ஜோடியாக, ‘சுத்தி’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
டிசம்பரில், இந்த படத்தின் படப் பிடிப்பு துவங்கவுள்ளது. இந்த படத்தில், கரீனாவுக்கு, அடிதடி கேரக்டராம். இதனால், கராத்தே போன்ற தற்காப்பு கலைகளை கற்பதுடன் உடல் அமைப்பையும், சிக்ஸ் பேக்காக மாற்றும்படி, இயக்குனர் வலியுறுத்தியுள்ளாராம். இதனால், ஜிம்மிலேயே, தவம் கிடக்கும் கரீனா, தன் உடலை, இரும்பு போல், மாற்றியுள்ளாராம். ஆனாலும், இன்னும் சிக்ஸ் பேக் வரவில்லை.
இதனால், ‘அடுத்த இரண்டு மாதங்களுக்குள், ‘சிக்ஸ் பேக்’கிற்கு மாறி விடுவேன்‘ என, சவால் விட்டுள்ளாராம், கரீனா. இந்த தகவல், பாலிவுட் நடிகர்களிடையே, வேகமாக பரவி வருகிறது. ‘நடிகைகள், சிக்ஸ் பேக் வைத்து நடித்தால், நம்மை, எத்தனை பேக் வைத்து நடிக்கச் சொல்வார்களோ’ என, கலக்கமடைந்துள்ளனர், பாலிவுட் நடிகர்கள்.