Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இறந்துபோன பாடகரால் சல்மான்கானின் ‛மாத்ரு பூமி' படத்திற்கு புதிய சிக்கல்

21 மார், 2026 - 12:00 IST
எழுத்தின் அளவு:
Dead-singer-creates-new-problem-for-Salman-Khans-Maatrubhumi
Advertisement

சல்மான்கான் நடிப்பில் தற்போது ஹிந்தியில் உருவாகி வரும் படம் ‛மாத்ரு பூமி'. முதலில் ‛பேட்டில் ஆப் கல்வான்' என டைட்டில் வைக்கப்பட்டு சமீபத்தில் தான் இதன் டைட்டில் பாத்ரூம் பூமி என மாற்றப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் அபூர்வ லகியா இயக்கி வருகிறார். ஏற்கனவே ஏப்ரலில் வெளியாகும் விதமாக திட்டமிட்டு தான் இந்த படம் தயாராகி வந்தது. அதேசமயம் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாடகரும் நடிகருமான பிரசாந்த் தமாங் என்பவரை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை நடத்தி வந்தனர். சல்மான்கான் உள்ளிட்டோருடன் இவர் நடிக்கும் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் கடந்த ஜனவரி இறுதியில் இவர் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தார்.

இதனையடுத்து இவர் இல்லாமல் எப்படி மீதி படத்தை முடிப்பது என்றும் அல்லது இவரது காட்சிகளை நீக்கிவிட்டு இவருக்கு பதிலாக புதிய நடிகரை வைத்து படப்பிடிப்பு நடத்தினால் ஏற்படும் கால விரயம் மற்றும் அதிகப்படியான செலவு குறித்தும் தற்போது படக்குழுவினர் மிகுந்த சிக்கலை சந்தித்து வருகின்றனர். ஏஐ தொழில்நுட்பம் மூலம் இதை சமாளிக்க முடியுமா என்றும் தற்போது அவர்கள் விவாதித்து வருகின்றனராம். இதனால் மாத்ரு பூமி திரைப்படத்தின் ரிலீஸ் இன்னும் சில மாதங்கள் தள்ளிப்போக கூடும் என தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
துரந்தர் 2 : முதல் நாள் வசூல் எவ்வளவு?துரந்தர் 2 : முதல் நாள் வசூல் எவ்வளவு? துரந்தர் 2 சக்சஸ் பார்ட்டியில் ரன்வீர் சிங்கை செல்லமாக அறைந்த நடிகை துரந்தர் 2 சக்சஸ் பார்ட்டியில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap