'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் |

கடந்த டிசம்பர் மாதம் ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை ஆதித்யா தர் என்பவர் இயக்கி இருந்தார். இந்த நிலையில் இதன் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது.. இந்த படத்தின் முதல் பாகத்தில் நடித்திருந்த ஒரு சில முக்கிய நட்சத்திரங்களும் இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றுள்ளனர். அதில் அக் ஷய் கன்னாவுக்கு ஜோடியாக நடித்த சவுமியா டாண்டனும் ஒருவர். தற்போது துரந்தர் 2 திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
இதை தொடர்ந்து நேற்று இந்த படத்தின் வெற்றியை படக்குழுவினருடன் இணைந்து பார்ட்டி வைத்து கொண்டாடினார் ரன்வீர் சிங். இந்த கொண்டாட்டத்தின்போது நடிகை சவுமியா டாண்டன், ரன்வீர் சிங்கின் கன்னத்தில் செல்லமாக அறையும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் சவுமியா டாண்டனின் கதாபாத்திரம் ரன்வீர் சிங்கை அறைவது போலத்தான் அறிமுகமாகிறது என்பதால் அதேபோல இந்த சக்சஸ் பார்ட்டியில் ஜாலியாக செய்து காட்டி இருக்கிறார் சவுமியா டாண்டன்.