தியேட்டரில் இயக்குனருக்கும் ரசிகர்களுக்கும் வாக்குவாதம் : சமாதானப்படுத்திய நடிகை | திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்ப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை : ஸ்வேதா மேனன் | 11 மாதங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் | அகண்டா 2 படத்தின் முதல் நாள் வசூல் ரூ.59.50 கோடி | நடிகை பாலியல் கடத்தல் வழக்கு : ஆறு பேருக்கு 20 வருட சிறை | ஜெயிலர் 2 புது அப்டேட் வராது ஏன்? | 'ஹேப்பி ராஜ்' இரண்டு குடும்பங்களின் கதை | பிரீத்தி அஸ்ராணிக்காக கதையை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக் : கன்னட எழுத்தாளர் கதையை படமாக்கிய கே. பாக்யராஜ் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே கிராமத்தில் எடுக்கப்பட்ட படம் |

பிரபல பாலிவுட் மூத்த நடிகரான தர்மேந்திரா கடந்த சில நாட்களுக்கு முன்பு வயோதிகம் மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். எண்பது தொண்ணூறுகளில் ரசிகர்களின் ஆதர்ச நாயகனாக வலம் வந்த இவருக்கு மொழி தாண்டியும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்த நிலையில் வரும் டிசம்பர் 8ஆம் தேதி தர்மேந்திராவில் பிறந்தநாள் வருகிறது. அன்றைய தினம் மும்பை லோனாவாலாவுக்கு அருகில் உள்ள கந்தலா என்கிற இடத்தில் உள்ள 100 ஏக்கர் பரப்பளவை கொண்ட தர்மேந்திராவின் பண்ணை வீடு ரசிகர்களின் பார்வைக்காக திறந்து விடப்பட இருக்கிறது.
இந்த தகவலை அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். டிசம்பர் 8ம் தேதி மதியம் ஒரு மணி முதல் இந்த பண்ணை வீடு ரசிகர்களுக்காக திறந்து விடப்படும். இதற்கு அனுமதி கட்டணம், முன்பதிவு என எதுவும் இல்லை. அது மட்டுமல்ல. பண்ணை வீட்டிற்கு வரும் ரசிகர்களை அழைத்து செல்வதற்காக லோனாவானாவில் இருந்து இலவச வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.