இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் |
ஹிந்தியில் பிக் பாஸ் சீசன் 19 நிகழ்ச்சி துவங்கி நடைபெற்று வருகிறது. பாலிவுட் முன்னணி நடிகரான சல்மான்கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் கடந்த செப்., 3 ம் தேதி நடந்த 11 வது எபிசோடில் புகழ்பெற்ற அக்னிபாத் மற்றும் கோரி தேரே பியார் மெய்ன் ஆகிய படங்களில் இடம்பெற்ற பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்தப் பாடல்களை பயன்படுத்தும் உரிமையை தங்களைக் கேட்காமல் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ள பிபிஎல் நிறுவனம், இந்த நிகழ்ச்சியை தயாரித்து வழங்கும் எண்டமோல் நிறுவனத்திற்கு இரண்டு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து அவர்களது வழக்கறிஞர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், இந்த பாடல்களின் உரிமையை தாங்கள் சோனி மியூசிக் நிறுவனத்திற்கு வழங்கி இருப்பதாகவும் அதேசமயம் பொதுவெளியில் இந்த பாடலை பயன்படுத்தும் உரிமை தங்களது பிபிஎல் இந்தியா நிறுவனத்திற்கு மட்டுமே இருப்பதாகவும் காப்பிரைட் சட்ட விதிகளை மீறி அனுமதியின்றி இந்த பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.