கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? | பிளாஷ்பேக்: விஜயகாந்தின் இரட்டை வேட கணக்கை துவக்கிய ராமன் ஸ்ரீ ராமன் |
பிரபலங்களின் படத்தை பயன்படுத்தி, தங்கள் தயாரிப்பு பொருட்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்வது பல நிறுவனங்களின் உத்தியாக உள்ளது. இதற்கு அவர்களிடம் ஒப்புதல் பெறாமல், விளம்பரம் செய்வது சட்டப்பூர்வமாக குற்றமாகும்.
அந்த வகையில், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், டில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், தனது அனுமதியின்றி மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள், ஏஐ புகைப்படங்கள் பல்வேறு வலைதளங்களில் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், தனது புகைப்படங்களை தவறாக சித்தரித்து, வணிக ரீதியில் சில நிறுவனங்கள் பயன்படுத்துவதாகவும், இதற்கு தடை விதிக்கவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி தேஜாஸ் கரியா, ''கூகுள் நிறுவனத்திடம் சம்பந்தப்பட்ட லிங்குகளை அகற்றச் சொல்லலாம். அனுமதியின்றி புகைப்படங்களைப் பயன்படுத்திய வலைதளங்கள், நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை பகிர வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
மேலும், அபிஷேக் பச்சனின் புகைப்படங்களை பயன்படுத்த தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்த நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
நேற்று, (செப்.,9) பாலிவுட் நடிகையும், அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யா ராய், இதே கோரிக்கையுடன் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அந்த வழக்கும் இதே ஜனவரி 15ம் தேதியில் விசாரணைக்கு வருகிறது.