இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'திரிஷ்யம், திரிஷ்யம் 2' ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இந்த படங்கள் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றியை பெற்றன. அந்த வகையில் ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் இதன் இரண்டு பாகங்களும் ரீமேக் செய்யப்பட்டன. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் குமார் மங்கத் பதக் என்பவர் மீது டில்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் போலீசில் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த புகாரின் படி டெல்லியை சேர்ந்த அந்த தொழிலதிபர் 'திரிஷ்யம் 2' படத்தின் சீனா, ஹாங்காங் மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் இந்த படத்தை வெளியிடும் உரிமையை தனக்கு தருவதாக கூறி 4.3 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு அதன்படி செய்யாமல் மோசடி செய்து விட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் பதக், ''இந்த புகாரின் பேரில் என் மீது விசாரணை நடத்துவது என்பது சமூகத்தில் என் மீது இருக்கும் மரியாதையை குறைக்கும் விதமாக இருக்கும்.. அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், இப்போது இந்த வழக்கு ஆரம்ப கட்ட விசாரணையில் தான் இருக்கிறது. அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய தேவையில்லை. தொடர்ந்து விசாரணை நடக்கட்டும்'' என்று கூறி உத்தரவிட்டுள்ளார்.