பாடகி கெனிஷா உடன் ஜோடியாக வந்த ரவி மோகன் : தந்தை என்பது பெயர் அல்ல பொறுப்பு என ஆர்த்தி ரவி காட்டம் | டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | மீண்டும் போதையில் கலாட்டா ; ஜெயிலர் வில்லன் கைதாகி ஜாமினில் விடுதலை | காந்தாரா படப்பிடிப்பில் விபத்து நடக்கவில்லை ; தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் | 'மாமன்' பட இசையமைப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட சூரி | அல்லு அர்ஜுனின் தோற்றத்தில் இருப்பவருக்கு ஜாக்பாட் ; விளம்பரத்தில் நடிக்க 12 லட்சம் சம்பளம் | 50 வருட அனுபவம் கொண்ட தேசிய விருது ஒளிப்பதிவாளர் டைரக்சனில் நடிக்கும் யோகிபாபு | கரையான் அரித்த ஒரு லட்சம்: ஏழைப் பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ் | சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! |
தமிழ் திரையுலகம் என்கிற அளவிலேயே தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்து வந்த சத்யராஜ், ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் ரொம்பவே பிரபலமாகிவிட்டார். தற்போது பெரிய ஹீரோக்களின் படங்களில் வில்லனாக மற்றும் முக்கிய வேடங்களில் மீண்டும் பிஸியாக நடிக்க துவங்கியுள்ளார் சத்யராஜ்.
அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் உடன் 'கூலி' படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு அவருடன் இணைந்து நடித்துள்ளார். அதேபோல ஷாருக்கானுடன் இணைந்து 'சென்னை எக்ஸ்பிரஸ்' என்கிற படத்தில் நடித்த சத்யராஜ், நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஹிந்தியில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள 'சிக்கந்தர்' என்கிற படத்திலும் மெயின் வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் வரும் மார்ச் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மும்பையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்வில் சத்யராஜ் பேசும்போது, “சல்மான் கானின் தந்தை சலீம் கானை சந்திக்கும் பெரும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. நான் கல்லூரி படிக்கும் காலத்தில் சலீம்-ஜாவேத் இருவரும் தங்களது கதைகள் மூலம் எத்தனை ஹீரோக்களை உருவாக்கி இருக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். அவரை சந்தித்தது எனக்கு கிடைத்த பாக்கியம். சொல்லப்போனால் இந்த படத்தில் சல்மான் கானுடன் இணைந்து நடித்ததை விட அவருடைய தந்தையை நான் சந்தித்ததைத்தான் மிகப்பெரிய வாய்ப்பாக நினைக்கிறேன்” என்று கூறினார். தந்தையை பற்றி சத்யராஜ் பெருமையாக கூறியதைக் கேட்டதும் சல்மான் கானுக்கு முகத்தில் மகிழ்ச்சி பொங்கியதை பார்க்க வேண்டுமே..