எட்டு வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் துருவா சார்ஜா, ரச்சிதா ராம் ஜோடி | 'விலாயத் புத்தா' கதையும் 'புஷ்பா' கதையும் ஒன்றா ? பிரித்விராஜ் விளக்கம் | அதிதி ராவ் ஹைதரி பெயரில் வாட்ஸ்அப்பில் மோசடி ; நடிகை எச்சரிக்கை | தெலுங்கில் ரீமேக் ஆகும் 'லப்பர் பந்து' | ஆர்யாவிற்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன்! | 'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா |

பழம்பெரும் நடிகர் ஓம்புரியின் முன்னாள் மனைவியும், நடிகை அனு கபூரின் சகோதரியும், எழுத்தாளர் மற்றும் இயக்குனருமான சீமா கபூரின் சுயசரிதை மும்பையில் வெளியிடப்பட்டது. 'Yun Guzari Hai Ab Talak' என பெயரிடப்பட்டுள்ள இந்த சுயசரிதையின் வெளியீட்டு விழாவில் அனுபம் கெர், பரேஷ் ராவல், தயாரிப்பாளர் போனி கபூர், அனு கபூர், திவ்யா தத்தா, ரகுவீர் யாதவ், பாடகர் ஜஸ்பிந்தர் நருலா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
சீமா கபூர் கூறுகையில், ‛‛இந்த நிகழ்ச்சிக்கு வருதை தந்த அனுபம் கெர், பரேஷ் ராவல் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. என் வாழ்வில் இதை மறக்க மாட்டேன். என் தாய்வழி தாத்தா ஒரு புரட்சியாளர். அவர்கள் பெங்காலியை சேர்ந்த கலைஞர்களும் கூட. என் தாத்தா ராணுவத்தில் கர்னலாக இருந்தார். ஆனால் என் அப்பா டில்லிக்கு வந்து 250 பேர் அடங்கிய நாடக கம்பெனியை துவக்கிவிட்டார். அதன்பின் சினிமா தாக்கத்தால் நாடகங்கள் வெகு தொலைவில் சென்றன. மெல்ல மெல்ல நாடக கம்பெனிகள் மூடப்பட்டன. இருப்பினும் கடன்கள் பெற்று, அம்மாவின் நகை, புடவைகளை விற்று கலைஞர்களின் தேவைகளை அப்பா பூர்த்தி செய்தார்'' என்றார்.
அனு கபூர் கூறுகையில்,‛‛எனது சகோதரி சீமா கபூரின் சுயசரிதை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. சீமா எத்தனையோ வலிகளையும், சித்ரவதைகளையும், துயரங்களையும் கடந்து வந்திருக்கிறார். அவர் துணிச்சலான பெண். எங்களுக்கு ஒரே ஒரு சகோதரி. நிறைய சிரித்திருக்கிறார், அழுதிருக்கிறார். அனைவருக்கும் உதவ வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பவர். இந்த சுயசரிதை சோகங்களின் கதை. எனது சகோதரி தனது பெற்றோருக்கு மிகுந்த மரியாதை அளித்துள்ளார். இந்த புத்தகம் அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது'' என்றார்.
பரேஷ் ராவல் கூறுகையில், ‛‛சுயசரிதை எழுதுவது எளிதான காரியம் அல்ல, சவாலானது. அவரின் இந்த படைப்பில் நான் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன். அவரின் சுயசரிதையை கண்டிப்பாக படிப்பேன்'' என்றார்.