ஆண்களை மட்டுமே தப்பு சொல்லக் கூடாது! ரவி மோகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை மீரா சோப்ரா! | ராகவா லாரன்ஸ், அஜய் ஞானமுத்து புதிய கூட்டணி | ஜூனியர் என்டிஆரின் 43வது பிறந்தநாள்: ரசிகர்கள் தள்ளுமுள்ளு! | மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா! | சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் ஆரம்பித்த ரவி மோகன்! | சூர்யா, த்ரிஷாவுக்கு நிம்மதியை கொடுத்த ‛கருப்பு' வெற்றி | கேன்ஸ் திரைவிழாவில் தாழ் திறவா | ராம் பொதினேனி படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா | நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்? | ‛இம்மார்ட்டல்' படப்பிடிப்பு நிறைவு |

தமிழில் யாவரும் நலம், தீராத விளையாட்டுப் பிள்ளை, வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை நீது சந்திரா. சமீபகாலமாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கும் இவர் தற்போது பிரபல பஞ்சாபி ராப் பாடகர் ஹனி சிங்கிற்கு எதிராக பாட்னா உயர் நீதிமன்றத்தில் பொது நலன் சார்ந்த வழக்கு ஒன்றை கொடுத்துள்ளார்.
சமீபத்தில் யோ யோ ஹனி சிங் பாடிய மேனியாக் என்கிற பாடலில் இடம் பெற்றுள்ள வரிகள் செக்ஸ் குறித்து ஓவராக பிரதிபலிப்பதாகவும், பெண்களை ஒரு போக பொருளாக சித்தரிக்கும் விதமாகவும் உருவாகி இருப்பதாக கூறியுள்ள நீது சந்திரா இந்தப் பாடலை தடை செய்ய வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாபி பாடகரான ஹனி சிங் தனது ராப் பாடல்களுக்கான ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தாலும் அடிக்கடி இது போன்று பெண்களை தவறாக சித்தரிக்கும் பாடல்கள் மூலம் சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில் கடந்த 2013ல் ஐ ஆஅம் ரேபிஸ்ட் மற்றும் 2019ல் மக்னா ஆகிய பாடல்கள் மூலம் சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.