தெலுங்கு சினிமா பக்கம் கவனத்தை திருப்பிய கார்த்திக் சுப்பராஜ்! | கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும் புதிய படம்! | ஹிந்தியில் ரீமேக் ஆகும் டிராகன்! | பக்தி முதல் காமெடி வரை: இந்த வாரம் வரிசை கட்டும் ஓடிடி ரிலீஸ் | ‛காட்டி' புரமோஷனுக்கு வராமல் எக்ஸ் தளத்தில் 'சாட்டிங்' மட்டும் செய்த அனுஷ்கா | வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் 'கண்ணப்பா' | மேற்கத்திய நாடுகள் பிரச்னையைப் பேசும் 'மதராஸி' | காதலனுக்காக தயாரிப்பாளரான நடிகை | அதிக வேலையால் வாழ்க்கையை இழந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை | பிளாஷ்பேக்: நறுக் வசனத்தில் முதல் படம் |
பாலிவுட்டில் நடிகர்கள், நடிகைகள் வீடுகளை வாங்குவது கூட பரபரப்பாகப் பேசப்படும் ஒன்றாக மாறிவிட்டது. மும்பையில் உள்ள ரியல் எஸ்டேட் விலை அவ்வளவு உயர்வு என்பதும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். எந்த ஒரு நடிகரோ, நடிகையோ வீடு வாங்கினால் அது பற்றிய தகவல்கள் உடனடியாக வெளிவந்துவிடும்.
பாலிவுட்டில் முக்கியமான குடும்பமாக இருப்பது அமிதாப்பச்சன் குடும்பம். அமிதாப் மனைவி ஜெயபாதுரி முன்னாள் நடிகை, மகன் அபிஷேக் நடிகர், மருமகள் ஐஸ்வர்யா நடிகை என குடும்பமே நட்சத்திரக் குடும்பம்தான்.
அவர்கள் சமீபத்தில் 25 கோடி ரூபாய் மதிப்பில் 10 அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஓபராய் எடர்னியா என்ற குடியிருப்பில் சுமார் 10 ஆயிரம் சதுரஅடி அளவில் 20 கார்களை நிறுத்தும் வசதி கொண்ட சுமார் 1000 சதுர அடி கொண்ட 8 வீடுகள் 900 சதுர அடி கொண்ட 2 வீடுகளை வாங்கியுள்ளார்களாம். அக்டோபர் 9ம் தேதி பதிவு செய்யப்பட்ட ஆவணத்திற்கான கட்டணமாக மட்டுமே ஒன்றரை கோடி ரூபாய் செலுத்தியுள்ளார்கள்.
அதில் 6 வீடுகள் அபிஷேக் பச்சன் பெயரிலும், 4 வீடுகள் அமிதாப் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளதாம். கடந்த நான்கு வருடங்களில் மட்டும் இப்படி ரியல் எஸ்டேட்டில் 200 கோடி வரை அமிதாப் குடும்பத்தினர் முதலீடு செய்துள்ளார்கள் என சில இணையதளங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அதில் இந்த ஆண்டு மட்டுமே 100 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாம்.
அமிதாப் குடும்பத்தினர் போலவே பல பாலிவுட் நட்சத்திரங்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளதாகச் சொல்கிறார்கள்.