2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கையை தழுவி ‛எமர்ஜென்சி' என்ற படத்தை ஹிந்தியில் இயக்கி, அவரது வேடத்தில் நடித்தும் உள்ளார் கங்கனா. இந்தியாவில் எமர்ஜென்சி பிறப்பிக்கப்பட்ட சம்பவங்களை வைத்து இந்த படம் பிரதானமாக உருவாகி உள்ளது. செப்., 6ல் படம் வெளியாகும் நிலையில் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பட விழாவில் பேசிய கங்கனா, ‛‛ஷாரூக்கான், அமீர்கான், சல்மான்கான் மூவரையும் எனது தயாரிப்பு, இயக்கத்தில் நடிக்க வைக்க ஆசையாக உள்ளது. மூவரும் திறமையாளர்கள் மட்டுமல்ல, ஹிந்தி சினிமாவுக்கு அவர்களால் அதிக வருமானமும் கிடைக்கின்றன. அவர்களால் சமூகத்தில் சில மாற்றங்களை உண்டாக்க முடியும்'' என்றார்.
நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தலில் ஹிமாச்சல் மாநிலத்தில் போட்டியிட்டு பா.ஜ. சார்பில் எம்பி.,யாக வெற்றி பெற்றுள்ளார் கங்கனா. அவர் எம்பி., யான பின் வெளியாகும் முதல் படம் இதுவாகும்.