டெஸ்ட் கதை பற்றி பகிர்ந்த நயன்தாரா | எனது கேரியரையே மாற்றிய படம் டிராகன் : கயாடு லோஹர் | ஹரி ஹர வீர மல்லு படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு | இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மோகன் ராஜா | சலார் 2வை தள்ளி வைத்த பிரபாஸ் | நிம்மதியா வாழ விடுங்க : நடிகர் பாலாவின் மூன்றாவது மனைவிக்கு நான்காவது மனைவி எச்சரிக்கை | எம்புரான் ரிலீஸில் புதிய சிக்கல் : லைகாவை ஒதுக்கிவிட்டு ரிலீஸ் செய்ய திட்டம்? | ஜவான் படத்தை மறுத்தது ஏன்? : மலையாள இளம் நடிகர் விளக்கம் | லோகேஷ் 40 ரஜினி 50 அமீர்கான் 60 : கூலி படக்குழு உற்சாக கொண்டாட்டம் | குட் பேட் அட்லி டீசர் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட ஆதிக் |
தெலுங்கு திரையுலகில் ஒரு காலத்தில் கதாநாயகனாக நடித்து, கடந்த பத்து வருடங்களாக வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் ஜெகபதி பாபு. குறிப்பாக தெலுங்கை தாண்டி தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி ஹீரோக்களுக்கு மோஸ்ட் வான்டெட் வில்லன் என்றால் டிக் செய்யப்படுவதில் முதல் ஆளாக இவர் இருக்கிறார். அந்த வகையில் கடந்த வருடம் பாலிவுட்டிலும் நுழைந்து சல்மான்கானுடன் கிஸி கா பாய் கிஸி கி ஜான் படத்தில் வில்லனாக நடித்த இவர் மீண்டும் சல்மான் கானுடன் இணைந்து இன்னொரு படத்திலும் நடித்து வருகிறார்.
அது மட்டுமல்ல இளம் நடிகர் ஆயுஷ் சர்மாவுடன் இணைந்து ருஸ்லான் என்கிற படத்திலும் நடித்துள்ளார் ஜெகபதி பாபு. சல்மான்கானுடன் இணைந்து நடிக்கும் போது ஜெகபதி பாபுவிடம் பேசிய சல்மான் கான், “உங்களது நடிப்பு திறமை மிகப்பெரியது. பெரிய நிறுவனங்கள் என்று பார்க்காமல் நல்ல கதை அம்சம் கொண்ட, நல்ல கதாபாத்திரம் கொண்ட படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடியுங்கள்” என்று கூறினாராம்.
இந்த ருஸ்லான் படத்திற்கு முன்பாக அவர் அப்படி சொன்ன அறிவுரையை பின்பற்றி தான் இந்த படத்திலே நடிக்க நான் ஒப்புக் கொண்டேன் என்று கூறியுள்ளார் ஜெகபதி பாபு.