'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் |
நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து சுதா இயக்கத்தில் தனது 43வது படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இதுதவிர வாடிவாசல் படமும் அவர் கைவசம் உள்ளது. இந்நிலையில் ஹிந்தியில் மகாபாரதத்தை தழுவி கர்ணன் கதையை வைத்து பிரமாண்ட படம் உருவாக உள்ளது. இதை ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்க உள்ளார். இதில் கர்ணன் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்கு 'கர்ணா' என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கும் இப்படம் பிரமாண்டமான பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. தற்போது படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்த படம் தொடர்பாக ஏற்கனவே சூர்யாவும், ராகேஷ் ஓம் பிரகாஷூம் சந்தித்து பேசிய குறிப்பிடத்தக்கது.